internet

img

இன்றுடன் சேவையை நிறுத்தும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்!  

கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.  

ஐஇ(IE) அல்லது எம்எஸ்ஐஇ(MSIE) என்றும் அழைக்கப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், முதலில் 1995 ஆம் ஆண்டு விண்டோஸ் 95க்கான ஆட்-ஆன் தொகுப்பின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது.  

2013 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட, ஐஇ 11 தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் இறுதி வெர்ஷன் ஆகும். அதன்பிறகு எந்த அப்டேட்டுகளும் செய்யப்படவில்லை. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பயனாளர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து விலகியது.    

இதையடுத்து ஜூன் 15 ஆம் ஆண்டு முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதனால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 27 ஆண்டுக்கால பயன்பாடு முடிவுக்கு வருகிறது.    

ஆனால் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் உள்கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயனாளர்கள் இன்ட்ர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடிப்படை பயன்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என  மைக்ரோசாப்ட் எட்ஜ் புரோகிராம் மேனேஜர் சியான் லையன்டர்சே தெரிவித்துள்ளார்.